Headlines

யோஷித ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உள்ள “சதி” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என உத்தரவிடக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காகவே அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமசந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *