வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தனது பிரதான கணக்கு அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்த கணக்குகளிலிருந்தும் நிறுவனங்களுக்கோ அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கோ எந்தவொரு இரட்டை கொடுப்பனவுகளையும் (duplicate payments) மேற்கொள்ளவில்லை என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அங்கீகரிக்கப்படாத அல்லது ஒழுங்கற்ற கொடுப்பனவுகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார்.
மேலும், தற்போதுள்ள கொடுப்பனவு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் குணசேன குறிப்பிட்டார்.
நளின் பண்டாரவின் கூற்றைக் கடுமையாகக் கண்டித்த பிரதி அமைச்சர், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும் வலியுறுத்தினார்.
