Headlines

இன்றைய வானிலை அறிக்கை 03.07.2026: பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்!

இன்று (03) நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அத்துடன், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்று எச்சரிக்கை:

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *