Headlines

இன்றைய வானிலை முன்னறிவிப்பு அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும்:

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் வளிமண்டலக் கீழ்த்தளப் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு:

  • நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
  • மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • சபரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பனிமூட்ட நிலை:

  • மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *