Headlines

இலங்கையில் முக்கிய நகரங்களில் இன்று நீர்வெட்டு அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று (10) இலங்கையின் முக்கிய நகரங்களில் நீர்வெட்டு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மற்றும் காலி பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும்.

காலி மாநகர சபை பகுதி: வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக, காலி மாநகர சபை பகுதியில் இன்று காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

களுத்துறை மற்றும் பல பகுதிகள்: கேத்தென நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டமை காரணமாக, களுத்துறை, வத்தேகம, மத்துகம, பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பகுதிகளில் இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *