இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளர்ச்சி நிலை காரணமாக, தீவில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மூடுபனி நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
