இலங்கைக்கு வடகிழக்கே நிலைத்திருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பிரதேசம், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் செல்வாக்கு காரணமாக, தீவில் தற்போது நிலவும் மழை காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சபரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
