Middle East போர், உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ (El Niño) ஆகியவற்றால் இலங்கைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நிலவுவதால், விவேகமான பொருளாதாரக் கொள்கைகளைப் பேணவும், கட்டமைப்புச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள், விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி (EFF) திட்டத்தின் கீழான முற்போக்குகள் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான Article IV ஆலோசனையின் கீழான கொள்கை முன்னுரிமைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய, ஈவன் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான IMF குழு செப்டம்பர் 10 முதல் 23, 2026 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது.
