Headlines

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அடா டெரன செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராக 2022 ஆம் ஆண்டில் பணியாற்றிய காலப்பகுதியிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலப்பகுதியிலும், ஜனாதிபதியின் செலவீனத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *