உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (24) நடத்தப்படவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தம்மைக் கைது செய்வதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்குமாறும், அவ்வாறான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரியே முன்னாள் ஜனாதிபதி தரப்பால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று நீதிமன்றத்தில் மேலதிக ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரவலான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
