Headlines

எல் நினோவின் தாக்கத்தைக் கையாள சிறப்புக் குழு நியமிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கத்தைக் கையாள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்காகச் சிறப்புக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “முஹுனட முஹுன” (முகாமுகம்) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எல் நினோ நிலைமையால் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதற்காக, ஜனாதிபதியின் தலைமையில் ஏற்கனவே தேசியத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்க மாவட்டக் குழு மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *