ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் இன்று (28) ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை அத்துமீறித் தடுத்து நிறுத்தியமை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, காயம் ஏற்படுத்தியமை, கொலை மிரட்டல் விடுத்தமை மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
