கொள்ளுப்பிட்டி, நிமல்கா கார்டன்ஸ் பகுதிக்கு அருகில், இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 540 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய சீனப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
