முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவருக்கு எதிரான முறைப்பாடு அல்லது எவ்வித விசாரணைகளுக்காக அவர் அங்கு அழைக்கப்பட்டார் என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சமீபகாலமாக அரசியல் பிரமுகர்கள் பலரிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
