உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தாக்கல் செய்த மனு தொடர்பில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைப்புகு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கர்தினால் ரஞ்சித் தனது இடைப்புகு மனுவின் மூலம், சல்லே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரியுள்ளதுடன், குறித்த மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
