Headlines

சுரேஷ் சல்லே தொடர்பான உத்தரவு இன்று!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லேயை பரிசோதித்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணத்துவ மருத்துவ சபை ஒன்றை நியமிக்கக் கோரி சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) வழங்கவுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, இந்த விவகாரம் கடந்த ஜூன் 4ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, சட்டமா அதிபரின் கோரிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *