Headlines

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) ஆகியவற்றுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில், எதிர்வரும் ஜூலை 6 (திங்கட்கிழமை) முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவிக்கையில், 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 20 சதவீதத்தாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய, தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவிலிருந்து 34 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சொகுசு பேருந்து சேவைகளைப் பொறுத்தவரை, 100 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு 12 சதவீதமும், 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு 15 சதவீதமும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *