Headlines

தாயார் மோகினி மறைவு: சோகத்துடன் துபாயில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித் குமார்!

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (85) வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

இந்த சோகச் செய்தியை துபாயில் இருந்த நடிகர் அஜித் குமார் அறிந்து, உடனடியாக சென்னைக்கு புறப்பட்டார். சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அஜித் குமாரின் முகம் மிகுந்த சோகமாகக் காணப்பட்டது. அங்கிருந்தவர்களை நோக்கி கைகூப்பி வணங்கியபடி, அஜித் காரில் ஏறி தனது தாயாரின் உடலைப் பார்க்க வீட்டுக்கு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *