பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களை ஒக்டோபர் 29 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு விசாரணையாளர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழேயே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
