Headlines

நாளை முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு, நாளை (ஜூன் 16) முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை அமுல்படுத்த அரச நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் போராட்டம், இம்மாதம் 20ஆம் திகதி வரை தொடரும்.

அதன்படி, நாளை (ஜூன் 16) மற்றும் அதற்கு அடுத்த நாளான ஜூன் 17ஆம் திகதியும் அனைத்து பொது இடங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஜூன் 18ஆம் திகதி கல்வி நிறுவனங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஜூன் 19ஆம் திகதியும், வீடுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் ஜூன் 20ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *