செய்தி விவரம்:
நியூசிலாந்தின் வடக்குத் தீவை ‘வையாணு’ (Vaiyaanu) புயல் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசிய சுழற்காற்றுடன் கூடிய கன மழையால் அப்பகுதி நிலைகுலைந்துள்ளது.
இந்தப் பேரிடரில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, மாயமான 11 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயலின் கோரத்தாண்டவத்தால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம், குடியிருப்புப் பகுதிகள், வீடுகள் மற்றும் வீதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப் பெருக்கால், 270 வீடுகளில் வசித்த சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிப்பு விவரங்கள்:
- மின்சாரம்: சுமார் 5,000 வீடுகளுக்கான மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து: வெள்ள அபாயம் காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எயார் நியூசிலாந்து நிறுவனம் தனது 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வங்காரே, பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது தெற்கு நோக்கி நகர்ந்து வருவதால், ஹாக்ஸ் பே வழியாகக் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
