கொலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கரன்தெனிய ராஜு’, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிறப்புக் குழுவினரால் நேற்று (17) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், ராஜு அண்மையில் இந்தியாவில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘கரன்தெனிய சுத்த’வின் சகோதரன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
