Headlines

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கு: பிடியாணையின் பின் நீதிமன்றில் ஆஜரானார் அர்ச்சுனா.

நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்க, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) சட்டத்தரணி ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார் என்று அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக கடந்த ஜூலை 24 ஆம் திகதி இவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். விசாரணை நேரத்தில் அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியிருந்தனர்.

அவர்கள் ஆஜராகாததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்யக் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஊடாக சீராய்வு மனு (Motion) ஒன்றைத் தாக்கல் செய்து, இந்த வழக்குத் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *