மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஏப்ரல் 21 ஆம் திகதி, “சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னோடி தாழ்தள பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது.
“சுத்தமான இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்த சேவையின் மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு பாதுகாப்பான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளன.
மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமை வகித்து இந்த முன்னோடி பஸ் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
