முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு, சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த மேன்முறையீட்டுக்கு எதிரான தமது ஆட்சேபனையை உத்தியோகபூர்வமாக முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
