மிரிஹான பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் மேற்கொண்ட முதலீடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCIB) முன்னிலையில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதுடன், ரோஹித ராஜபக்ஷவிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
