Headlines

4 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 2-ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, 4 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 2-ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று (14) மாலை 4:00 மணி முதல் நாளை (15) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை நிலை 2: ஆம்பர் (விழிப்புடன் இருக்கவும்)

  • காலி மாவட்டம்: நெலுவ
  • களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பதுரலிய, மத்துகம, ஹொரண, வலல்லாவிட்ட
  • குருநாகல் மாவட்டம்: அலவ்வ
  • இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல, இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 1: மஞ்சள் (கவனமாக இருக்கவும்)

  • பதுளை மாவட்டம்: பண்டாரவளை, ஹாலி-எல, பசறை
  • கொழும்பு மாவட்டம்: சீதாவக்கை
  • காலி மாவட்டம்: தவலம, எல்பிட்டிய, நியகம
  • களுத்துறை மாவட்டம்: இங்கிரிய, புலத்சிங்கள
  • கண்டி மாவட்டம்: பாதஹேவாஹெட்ட, பஸ்பாகே கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, பன்வில, யட்டிநுவர, கங்கா இஹல கோரளை, உடபலாத, பூஜப்பிட்டிய, தும்பனே, தெல்தோட்டை, தொலுவ, உடுநுவர, ஹதறலியத்த, ஹாரிஸ்பத்துவ
  • கேகாலை மாவட்டம்: மாவனல்லை, புலத்கொஹுப்பிட்டிய, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, கேகாலை, இறம்புக்கனை, வரக்காப்பொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல
  • குருநாகல் மாவட்டம்: நாரம்மல, ரிதீகம
  • மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்கை கோரளை, ரத்தொட்ட
  • மாத்தறை மாவட்டம்: பிட்டபெத்தர
  • மொனராகலை மாவட்டம்: படல்கும்புர, வெள்ளவாய, பிபிலை
  • நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை, கொத்மலை மேற்கு
  • இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, குருவிட்ட, கலவான, கொடகவெல, கிரியெல்ல, அயகம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *