Headlines

இன்றைய வானிலை: பிற்பகலில் நாடு தழுவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை

கொழும்பு: வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *