சென்னை: சினிமா பிரியர்களைக் கவரும் வகையில், இந்த வார இறுதியில் (அக்டோபர் 10) பல்வேறு ஓடிடி தளங்களில் பல புதிய தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.
முக்கிய வெளியீடுகளின் பட்டியல்:
- ராம்போ (சன் நெக்ஸ்ட்): முத்தையா இயக்கத்தில், அருள்நிதி குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள இந்தத் திரைப்படம், இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- வேடுவன் (ஜீ5): ‘மண்டேலா’ புகழ் கண்ணா ரவி நடித்துள்ள இந்த வித்தியாசமான த்ரில்லர் வெப் தொடர், இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- குருக்ஷேத்திர (நெட்பிளிக்ஸ்): மகாபாரதப் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஹிந்தி வெப் தொடர், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
- பாம் (சிம்ப்ளி சவுத் & ஆஹா): அர்ஜுன் தாஸ் நடிப்பில், திரையரங்குகளில் வரவேற்பைப் பெறத் தவறிய இந்தத் திரைப்படம், இன்று முதல் சிம்ப்ளி சவுத் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
- மிராய் (டிஸ்னி+ ஹாட்ஸ்டார்): தெலுங்கில் உருவான இந்த சயின்ஸ்-பிக்ஷன் த்ரில்லர் திரைப்படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு, இன்று முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
- டிரிபநாதரி பார்பரிக் (சன் நெக்ஸ்ட்): சத்யராஜ் நடிப்பில், தெலுங்கில் வெளியான இந்தத் திரைப்படம், தமிழ் டப்பிங்கில் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
