கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை), எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நவம்பர் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும். வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படும்.
சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் திகதிகள் தீர்மானிக்கப்பட்டன.
