Headlines

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணியை மானியமாக வழங்குகிறது சீனா!

கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான, அரச மற்றும் அரச அனுசரணை பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்குத் தேவையான முழுமையான சீருடைத் துணி மூலப்பொருட்களையும் மானியமாக வழங்க சீன அரசாங்கம் இணங்கியுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதிலும் உள்ள 44 இலட்சத்திற்கும் (4.4 மில்லியன்) அதிகமான மாணவர்கள் பயனடைவர்.

இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, கல்வி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் சீனத் தூதுவர் சீ சென்ஹொங் ஆகியோர் தலைமையில் நேற்று (11) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கடந்த 2025ஆம் ஆண்டும், 517 கோடி ரூபாவிற்கும் (5.17 பில்லியன்) அதிக பெறுமதியான சீருடைத் துணிகளை சீனா இலங்கைக்கு மானியமாக வழங்கியிருந்ததாக அமைச்சர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

One thought on “2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணியை மானியமாக வழங்குகிறது சீனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *