(பி.ப. 02:50) நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பரவலாக்கும் முக்கிய நடவடிக்கையாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய தகவல் தொழில்நுட்ப வலயங்கள் (IT Zones) குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இலங்கையின் முதலீட்டுச் சபையின் (BOI) கீழ், டிகன மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய தகவல் தொழில்நுட்ப வலயங்கள் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பை மையமாகக் கொண்ட IT துறையை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கும் இந்த நடவடிக்கை, குறித்த பிரதேசங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பிராந்தியப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என அவர் தனது பாதீட்டு உரையில் சுட்டிக்காட்டினார்.
