கொழும்பு, நவம்பர் 17: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (நவம்பர் 17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகளையும், வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்க்கத் தவறியதைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள், வெளி மருந்தகங்களில் மருந்துகளைப் பரிந்துரைத்தல் மற்றும் வெளி ஆய்வுகூடங்களில் பரிசோதனைகளைச் செய்யப் பரிந்துரைத்தல் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட சேவைகளை வழங்குவதைக் மட்டுப்படுத்தவுள்ளனர்.
