Headlines

என்னை கூப்பிடுறீங்களா? இல்ல கோர்ட்டுக்குப் போகவா?” – சட்டப் புத்தகத்துடன் ஆளுநரை மிரள வைக்கும் விஜய்!

சென்னை: தமிழக அரசியல் களத்தில், “கடைசியில சட்டம் தான் முக்கியம்,” என்ற ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்துள்ளார் ‘தவெக’ (TVK) தலைவர் விஜய். கடந்த நாற்பத்தெட்டு மணிநேரத்தில் இரண்டு முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய், இப்போது டெல்லி உச்சநீதிமன்ற மற்றும் காங்கிரஸ் சட்ட நிபுணர்களுடன் இணைந்து ‘லீகல் மேஜிக்’ காட்டத் தயாராகிவிட்டார். இனி அரசியலை விட சட்டம் தான் முக்கியம் என முடிவு செய்துவிட்டாரோ?

விஜய் முன்வைத்த நான்கு முக்கிய கேள்விகளும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகளும் இதோ:

1. “107 இடங்கள் இருக்கின்றன, மேலும் ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் என்னை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார்கள்?”

சட்ட நிபுணர்கள் விஜய்யிடம், “நீங்கள் 118-ஐ எட்டவில்லை என்றாலும், நீங்கள் தான் மிகப்பெரிய கட்சி. உங்களைத்தான் முதலில் அழைக்க வேண்டும்,” என்றனர். “ஆளுநர் காலம் கடத்தினால், அவர் தனது கடமையிலிருந்து தவறுவதாகக் கருதி, அவரைச் செயல்படப் பணிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடலாம்,” என அறிவுறுத்தினர். விஜய் ஆளுநருக்கு எதிராக ‘Mandamus’ (மாண்டமஸ்) மனு தாக்கல் செய்து நீதிமன்றம் செல்லத் தயாராகிவிட்டார்.

2. “நீதிமன்றத்திற்குச் சென்றால் தீர்வு கிடைக்குமா?”

சட்ட நிபுணர்கள் விஜய்யிடம், “நிச்சயமாக! உச்சநீதிமன்றம் நள்ளிரவில் கூட விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளது. ஆளுநரின் அதிகாரங்கள் வரம்பற்றவை அல்ல. ‘சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் அல்லது நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளனர்,” என்றனர்.

3. “இந்த ‘எஸ்.ஆர். பொம்மை’ (S.R. Bommai) வழக்கு பற்றி என்ன சொல்கிறீர்கள்?”

சட்ட நிபுணர்கள் விஜய்யிடம், “இது தான் துருப்புச் சீட்டு! 1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின்படி, ‘ஒரு கட்சியின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் வைத்து ஆளுநர் தீர்மானிக்கக் கூடாது; சட்டமன்றத்தின் தளத்தில்தான் (Floor Test) நிரூபிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் சாராம்சம். ஆளுநர் உங்களை அனுமதிக்காமல் இருப்பது சட்டவிரோதமானது,” என்றனர்.

4. “மீண்டும் தேர்தலா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியா?”

ஆளுநர் ஒருவேளை எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தால், அவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம். அப்படி நடந்தால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், 107 இடங்களை வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு வாய்ப்பு வழங்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிட்டுவது ஜனநாயக விரோதமானது என காங்கிரஸ் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். ஒருவேளை தேர்தல் மீண்டும் வந்தால், அது ‘மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல்’ என மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது.

அரசியலில் மட்டும் இல்லாமல், சட்டப் போராட்டத்திலும் ‘மாஸ்’ காட்டத் தயாராகிவிட்டார் விஜய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *