லாஃப்ஸ் காஸ் பீஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், அதன் எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மே மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் ஊடாக, உலக சந்தையில் எல்பிஜி கொள்வனவில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 6,245 ரூபாவாகும்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 2,500 ரூபாவாகும்.
உலகளாவிய ரீதியில் சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், இலங்கையிலுள்ள வீட்டு, வணிக மற்றும் கைத்தொழில் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி எல்பிஜியை வழங்குவதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
