முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, எதிர்வரும் மே 09 ஆம் திகதி சனிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த வெளிவாரி வளங்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் குறித்தே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் அவர் அண்மையில் ஊடகங்களுக்கு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாகவே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை அவர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
