மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ மோதல்கள் காரணமாக உலகளாவிய பொருளாதாரச் சூழலில் சவால்கள் நிலவிய போதிலும், இலங்கையின் ஏற்றுமதித் துறை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் நாட்டின் ஏற்றுமதிகள் 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, தற்போதைய சாதகமான போக்கைக் கருத்தில் கொள்ளும்போது, கடந்த ஆண்டு எட்டப்பட்ட வருமான இலக்குகளை மிஞ்சுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானமானது நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
