Headlines

அப்பாவின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவேன்”: துயரத்திற்கு மத்தியிலும் மீண்டும் அணியில் இணையும் துனித் வெல்லாலகே!

கொழும்பு: தந்தையின் திடீர் மறைவையடுத்து, ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து நாடு திரும்பியிருந்த இலங்கை சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே, மீண்டும் தேசிய அணியுடன் இணைவதற்காக இன்று (20) காலை புறப்பட்டுச் சென்றார். புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் ஒரு சிறந்த வீரராகி, இலங்கைக்காக விளையாட வேண்டும் என்பதே எனது தந்தையின் ஒரே விருப்பமாக இருந்தது. நான் நிச்சயமாக அந்த விருப்பத்தை நிறைவேற்றுவேன்,” என உருக்கமாகக் கூறினார். “இந்தக் கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, கப்டன் சரித் அசலங்க, சக வீரர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்,” எனவும் அவர் தெரிவித்தார். துனித் வெல்லாலகேவின் தந்தையான, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரங்க வெல்லாலகே, கடந்த 18ஆம் திகதி மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *