இன்று கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் இன்றைய நாளுக்குள் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கைது நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்களை எதிர்க்கட்சியினர் தமது அரசியல் முகாம்களில் தொடர்ந்து வைத்துக்கொள்வார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைதுகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதோடு, இது குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
