2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்பதற்குத் தான் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை என்றும், எனினும் அது தனது பொறுப்பு என்பதால் அதைப் பொறுப்பேற்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ரணிலுடன் வாசிப்போம்’ (Read with Ranil) என்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “அந்த நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்பதற்கு நான் முதல் தெரிவாக இருக்கவில்லை. வேறு யாரும் முன்வராத காரணத்தினாலேயே நான் அதனைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. நான் அநேகமாக நான்காவது தெரிவாகவே இருந்திருப்பேன்,” என்று குறிப்பிட்டார்.
