மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
