இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வரும் சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்று (28) முதல் ஆரம்பமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ
