Headlines

விடுதலைப் புலிகளின் தங்கம் என நம்பப்படும் 6,000 பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு!

கொழும்பு: யுத்தத்தின் பின்னர், வட-கிழக்கில் மீட்கப்பட்டதும், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என நம்பப்படுவதுமான 10,000 தங்கப் பொருட்களில், 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) நேற்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தின் ஆய்வுக்குப் பின்னரே, தங்கத்தின் தரம் மற்றும் எடை உறுதிப்படுத்தப்பட்டு, இந்த 6,000 பொருட்களும் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தத் தங்கப் பொருட்கள் மக்களால் புலிகளுக்குத் தன்னிச்சையாக வழங்கப்பட்டனவா அல்லது பலவந்தமாகப் பறிக்கப்பட்டனவா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக CIDயினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *