இரத்தினபுரியில் புதிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் திறப்பு: 80,000 மக்கள் பயனடைவர்!
இரத்தினபுரி: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரத்தினபுரி பிரதேச சபை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகக் கட்டடம், பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நேற்று (27) பிற்பகல் மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
நான்கு மாடிகளைக் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் முதல் இரண்டு மாடிகள், 125 மில்லியன் ரூபாய் (12.5 கோடி) செலவில் மத்திய அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகம் மூலம், 31 குடும்ப சுகாதார சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்படும். இந்நிகழ்வில், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜபக்ஷ, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
