கொழும்பு (News 1st): புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள், இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என எரிவாயு விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹம்பாந்தோட்டை மற்றும் மாபிம முனையங்கள் ஊடாக இன்று 5,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சந்தைக்கு விடுவிக்கப்படும் என லாக்ப்ஸ் காஸ் பிஎல்சி (Laugfs Gas PLC) தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது விநியோக நடவடிக்கைகளும் இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ காஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நுகர்வோருக்கு சீரான விநியோகத்தை உறுதி செய்துள்ள அந்நிறுவனம், எதிர்வரும் மே மாதம் வரை போதுமான அளவு கையிருப்பு தற்போது உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
