Headlines

ஐபிஎல் 2026: ரசிக் சலாம், புவனேஷ்வர் அபாரம்; லக்னோவை 146 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 146 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து அசத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ அணியின் பேட்டிங் வரிசை ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே சரிவைச் சந்தித்தது. தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 12 ரன்களில் வெளியேறினார். நிதானமாக ஆடிய மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், லக்னோ அணியின் நடுகள பேட்டிங் மோசமாக சொதப்பியது. காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் வெளியேற, அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நட்சத்திர வீரர்களின் இந்த விக்கெட் வீழ்ச்சியால் லக்னோ அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி மற்றும் முகுல் சவுத்ரி ஜோடி அணியை மீட்டெடுத்தது. பதோனி 24 பந்துகளில் 38 ரன்களும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), முகுல் சவுத்ரி 28 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பெங்களூரு அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய இளம் வீரர் ரசிக் சலாம் தார் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *