பலத்த மழை, காற்று எச்சரிக்கை: மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; பலத்த காற்று வீசும்!
வானிலை அறிக்கை:
இன்று (10) மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
