சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள் உடனடியாக அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊவாபரணகம – அலகொல்ல தோட்டத்தில் 13 ஆண்டுகளாக மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல தலைமுறைகளாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் மலையக மக்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகப் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
