Headlines

உலகில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை 4வது இடம்! – சர்வதேச நிதி நிறுவனம்

சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF) உலகின் வேகமாக முன்னேறும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாவது இடத்திலும், மொசாம்பிக் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக IIF சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி ஆளுமை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில், கடன் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *