Headlines

நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் – எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்தே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அரசு நீட் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

எவ்வாறாயினும், விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. சுமுகமான சூழல் இல்லாத காரணத்தினால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *